Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ஐ.நா. அமைதிப்படை தொடர்ந்து செயல்பட லெபனான் வலியுறுத்தல்

ஐ.நா. அமைதிப்படை தொடர்ந்து செயல்பட லெபனான் வலியுறுத்தல்

சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட எல்லைகள் வரை லெபனான் தனது நிலப்பகுதிகளை மீட்பதற்கு பாதுகாப்புக் கவுன்சிலின் 1701 தீர்மானம் சட்ட உத்தரவாதமாக உள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

லெபனானில் ஐ.நா. இடைக்கால அமைதிப்படை தொடர்ந்து செயல்படுவது அவசியம் என்று அந்நாட்டு நாடாளுமன்றத் தலைவர் நபீஹ் பெர்ரி வலியுறுத்தியுள்ளார்.

லெபனானுக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதர் சாண்ட்ரா டி வேலுடன் நடைபெற்ற சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். தெற்கு லெபனான் நிலவரம், பிராந்திய அரசியல் மற்றும் கள நிலவரங்கள் குறித்து இருவரும் ஆலோசித்தனர்.

சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட எல்லைகள் வரை லெபனான் தனது நிலப்பகுதிகளை மீட்பதற்கு பாதுகாப்புக் கவுன்சிலின் 1701 தீர்மானம் சட்ட உத்தரவாதமாக உள்ளது. அதனை முழுமையாகச் செயல்படுத்த அமைதிப்படை உதவுவதாக பெர்ரி கூறினார்.

2790 தீர்மானத்தின்படி, அமைதிப்படையின் பணிக்காலம் டிசம்பர் 31-ம் தேதியுடன் முடிகிறது. இதையடுத்து, படையினரைப் படிப்படியாகக் குறைத்து வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. இந்தச் சூழலில், அமைதிப்படையின் இருப்பைத் தொடர வேண்டியதன் முக்கியத்துவத்தை பெர்ரி மீண்டும் எடுத்துரைத்துள்ளார்.

முந்தைய செய்தி
முடக்கப்பட்ட ரஷ்ய சொத்துகள்; உக்ரைனுக்கு 4,940 கோடி டாலர் கடனுதவி
அடுத்த செய்தி
கோத்ரெஜ் அக்ரோவெட் Q2 நிகர லாபம் 22% உயர்வு

தொடர்புடைய செய்திகள்